Atmanandalahari
Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad Gita, Brahma Sutra and Prakarana Granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood. This will be a multilingual podcast with episodes in English, Tamil and Sanskrit.
எங்கும் நிறைந்த இருப்பாய், மங்காத சித்தாய் பொங்கும் ஆநந்த பொலிவான மெய்ப்பொருளை, ஆத்மாவை, தங்கு தடையில்லா தத்துவத்தை, இரண்டற்ற ஒன்றான அத்வைத கருத்துக்களை இந்த வலையொலிப் பதிவில் பகிர்ந்துகொள்வோம். உபநிடதங்கள், பகவத் கீதை, ப்ரம்மசூத்ர கருத்துக்களையும், வேதாந்த நூல்களையும் ஆராய்வோம். வாழையடி வாழையாய் வந்த இந்த அறிவொளியில், அறியாமை இருள் அகலட்டும். இந்த வலையொலி ஆங்கிலம், தமிழ், மற்றும் வடமொழியில் ஒலிக்கும் .
Listen on:
Episodes

Jan 25, 2026

Jan 22, 2026

Jan 17, 2026
Jan 17, 2026
35 min
ஜீவனுக்கு 7 அவஸ்தைகள்
1. அஞ்ஞானம்,
2. மூடல் என்ற ஆவரணம்,
3. முளைத்தல் தோற்றம் என்ற விக்ஷேபம்,
4. காணாத ஞானம் பரோக்ஷ ஞானம்,
5. சந்ததம் கண்ட ஞானம் அபரோக்ஷ ஞானம்,
6. தழல்கெடல் - சோக நிவிர்த்தி,
7. குளிர்மை ஆதல் -குறைவிலா நிறைவு (திருப்தி)

Jan 9, 2026
Jan 9, 2026
28 min
ஸாரம்
பெயர் விளக்கம் - கைவல்ய நவநீதம்
பாயிரம் - நிர்குண ப்ரஹ்மன் , ஆன்ம ஸ்வரூப மங்களம் , சகுண வழிபாடு, அதிகாரத்வம் , வஸ்து
தத்துவ விளக்கப் படலம் ஆரம்பம்
சாதன சதுஷ்டயம்
விவேக, வைராக்ய ,சம ஆதி ஷட்பத்தி , முமூக்ஷத்வம்
ஜிங்யாஸத்வம்
சிஷ்யன் குருவை அணுகுதல்
மூன்று அவஸ்தை
காரண காரிய ப்ரக்ரியா
ஸ்ருஷ்டி உருவான விதம்
அத்யாரோபம் - அபவாதம்
ப்ரஹ்மன், மாயை,
மூன்று குணங்கள் வெளிப்பாடு
வயஷ்டி ஸமஷ்டி - மூன்று சரீர வெளிப்பாடு
மாயையின் இரண்டு சக்திகள்

Dec 20, 2025
Dec 20, 2025
39 min
நடக்காததை நடந்தது போல் காட்டும்
இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும்
கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும்
இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும்
ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும்
இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும்
ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும்
இருப்பை வைத்தே இயங்கி நிற்கும்
அநாதி காலமாய் ஆழிமழை பொழியும்
ஆகாயம் போலவே நீ நனையாது நிற்பாய்
மாயை என்பதே மாயை எனஅறிவாய்
எழுவாய்! விழிப்பாய்! உண்மையை அறிவாய்!
சத்தாய் சித்தாய் ஆனந்தமாய் இருப்பாய்!

Dec 11, 2025
Dec 11, 2025
31 min
ஆவரணம் தான் அறியாமைக்கு காரணம்
அதிஷ்டானம் - சாமன்யம் - இது
ஆஸ்ரேயம் - விசேஷம் - கயிறு
அத்யாஸம் - கல்பிதம் - பாம்பு
வேற்றுமையை மதிக்காமல் இருப்பதே வேதாந்தத்தின் பயன்

Dec 5, 2025
Dec 5, 2025
39 min
கைவல்ய நவநீதம்
அத்யாரோபம் செய்து உலகம் உருவான விதம் சொல்லி, அபவாதம் செய்து , உலகம் பொய் எல்லாம் மாயை என்று எடுத்து சொல்லி ப்ரம்மம் ஒன்றே சத்யம் என்று நிரூபணம் செய்யப்படுகிறது
வேதாந்த வில்லு பாட்டு
ப்ரம்மம் ப்ரம்மம் என்று ஒன்று உண்டாம்
ஆமாம்
அது மாயை என்ற சக்தியை பார்த்துதாம்
ஆமாம்
மாயைக்கு மூணு குணம் உண்டாம்
ஆமாம்
அந்த மாயை என்பதே ஒரு மாயை
ஆமாம்
ஜகத் என்பது மித்யா
ஆமாம்
ப்ரம்மம் மட்டுமே சத்யம்
ஆமாம்

Nov 20, 2025
Nov 20, 2025
37 min
காரண சரீரம்
Karana sareeram
சூக்ஷ்ம சரீரம்
Sukshma sareeram
ஸ்தூல சரீரம்
Sthula sareeram
ஸமஷ்டி
Samashti
Macrocosmoic
ஈஸ்வரன்
Isvara
ஹிரண்யகர்பன்
Hiranyagarbha
விராட்
Virat
வ்யஷ்டி
Vyashti
Microcosmic
ப்ராக்ஞா
Prajna
தைஜஸன்
Thaijasa
விஷ்வா
Vishva

Nov 3, 2025
Nov 3, 2025
36 min
ஈஸ்வரன்
ஜீவா
சுத்த சத்வம்
மலின சத்வம்
மாயா - காரண சரீரம்
அவித்யா - காரண சரீரம்
மாயா -ஆனந்த மய கோசம்
அழுக்கு - மோகம் - ஆனந்த மய கோசம்

Oct 5, 2025
Oct 5, 2025
39 min
உலகம் எப்படி உருவானது?
சத்வ ரஐஸ் தமோ குண வெளிப்பாடு
ஈஸ்வரன் - சத்வ குண பிரதிபிம்ப சைதன்யம், அந்தர்யாமி, அஸங்கத்வம், நிமித்த காரணம்
ஜீவகோடி- ரஜோ குண பிரதிபிம்ப சைதன்யம்
மாயை என்பதே மாயை
நடக்காததை நடந்தது போல் காட்டும்
இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும்
கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும்
இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும்
ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும்
இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும்
ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும்
