Atmanandalahari
Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad Gita, Brahma Sutra and Prakarana Granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood. This will be a multilingual podcast with episodes in English, Tamil and Sanskrit.
எங்கும் நிறைந்த இருப்பாய், மங்காத சித்தாய் பொங்கும் ஆநந்த பொலிவான மெய்ப்பொருளை, ஆத்மாவை, தங்கு தடையில்லா தத்துவத்தை, இரண்டற்ற ஒன்றான அத்வைத கருத்துக்களை இந்த வலையொலிப் பதிவில் பகிர்ந்துகொள்வோம். உபநிடதங்கள், பகவத் கீதை, ப்ரம்மசூத்ர கருத்துக்களையும், வேதாந்த நூல்களையும் ஆராய்வோம். வாழையடி வாழையாய் வந்த இந்த அறிவொளியில், அறியாமை இருள் அகலட்டும். இந்த வலையொலி ஆங்கிலம், தமிழ், மற்றும் வடமொழியில் ஒலிக்கும் .
Episodes

7 days ago
7 days ago
நடக்காததை நடந்தது போல் காட்டும்
இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும்
கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும்
இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும்
ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும்
இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும்
ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும்
இருப்பை வைத்தே இயங்கி நிற்கும்
அநாதி காலமாய் ஆழிமழை பொழியும்
ஆகாயம் போலவே நீ நனையாது நிற்பாய்
மாயை என்பதே மாயை எனஅறிவாய்
எழுவாய்! விழிப்பாய்! உண்மையை அறிவாய்!
சத்தாய் சித்தாய் ஆனந்தமாய் இருப்பாய்!

Thursday Dec 11, 2025
Thursday Dec 11, 2025
ஆவரணம் தான் அறியாமைக்கு காரணம்
அதிஷ்டானம் - சாமன்யம் - இது
ஆஸ்ரேயம் - விசேஷம் - கயிறு
அத்யாஸம் - கல்பிதம் - பாம்பு
வேற்றுமையை மதிக்காமல் இருப்பதே வேதாந்தத்தின் பயன்

Friday Dec 05, 2025
Friday Dec 05, 2025
கைவல்ய நவநீதம்
அத்யாரோபம் செய்து உலகம் உருவான விதம் சொல்லி, அபவாதம் செய்து , உலகம் பொய் எல்லாம் மாயை என்று எடுத்து சொல்லி ப்ரம்மம் ஒன்றே சத்யம் என்று நிரூபணம் செய்யப்படுகிறது
வேதாந்த வில்லு பாட்டு
ப்ரம்மம் ப்ரம்மம் என்று ஒன்று உண்டாம்
ஆமாம்
அது மாயை என்ற சக்தியை பார்த்துதாம்
ஆமாம்
மாயைக்கு மூணு குணம் உண்டாம்
ஆமாம்
அந்த மாயை என்பதே ஒரு மாயை
ஆமாம்
ஜகத் என்பது மித்யா
ஆமாம்
ப்ரம்மம் மட்டுமே சத்யம்
ஆமாம்

Thursday Nov 20, 2025
Thursday Nov 20, 2025
காரண சரீரம்
Karana sareeram
சூக்ஷ்ம சரீரம்
Sukshma sareeram
ஸ்தூல சரீரம்
Sthula sareeram
ஸமஷ்டி
Samashti
Macrocosmoic
ஈஸ்வரன்
Isvara
ஹிரண்யகர்பன்
Hiranyagarbha
விராட்
Virat
வ்யஷ்டி
Vyashti
Microcosmic
ப்ராக்ஞா
Prajna
தைஜஸன்
Thaijasa
விஷ்வா
Vishva

Monday Nov 03, 2025
Monday Nov 03, 2025
ஈஸ்வரன்
ஜீவா
சுத்த சத்வம்
மலின சத்வம்
மாயா - காரண சரீரம்
அவித்யா - காரண சரீரம்
மாயா -ஆனந்த மய கோசம்
அழுக்கு - மோகம் - ஆனந்த மய கோசம்

Sunday Oct 05, 2025
Sunday Oct 05, 2025
உலகம் எப்படி உருவானது?
சத்வ ரஐஸ் தமோ குண வெளிப்பாடு
ஈஸ்வரன் - சத்வ குண பிரதிபிம்ப சைதன்யம், அந்தர்யாமி, அஸங்கத்வம், நிமித்த காரணம்
ஜீவகோடி- ரஜோ குண பிரதிபிம்ப சைதன்யம்
மாயை என்பதே மாயை
நடக்காததை நடந்தது போல் காட்டும்
இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும்
கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும்
இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும்
ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும்
இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும்
ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும்

Thursday Sep 25, 2025
Thursday Sep 25, 2025
The Adyāropa Apavāda method of explained with examples like- Seeing snake in rope/ Seeing man in post/ Seeing mirage/ Seeing blueness in sky.
The truth that is with a name or form, the one that is same, the one without second, sentience, light that is full without any blemishes.
The difference between Brahman and Maya is highlighted and the manifestation of cosmos is discussed.
Brahman
Maya
Satyam
Mithya
Nirvikara
Savikara
Nirguna
Saguna
Chetanam
Jadam
samam
Vishamam
Aparinami
Parinami

Thursday Sep 18, 2025
Thursday Sep 18, 2025
மரக்கிளை நிலவு நியாயம் , அருந்ததி தர்சன நியாயம் - தெரிந்ததைக் கொண்டு தெரியாததைக் காட்டுதல்.
அத்தியாரோபம்/ அபவாதம் யுக்தி மூலம் பிரம்மன் சத்தியம் உலகம் மித்யா என்று விளக்குதல்
கயிறு பாம்பாகத் தெரிதல், கட்டை மனிதனாகத் தெரிதல், கானல் நீராகத் தெரிதல், வானம் நிறமுடையதாகவும் நிலமுடையதாகவும் தெரிதல் போன்ற உதாரணங்களை சொல்லி குரு விளக்குகிறார்.

Thursday Sep 11, 2025
Thursday Sep 11, 2025
அறிவதும் அறியப்படுவதும் எப்பொழுதும் வேறு வேறானதே.
தேஹம் வேறு - தேஹி வேறு என்ற அறிவு . உடலில் இருந்து உடலை இயக்குவது எதுவோ அது உடலுக்கு வேறானது (ஸூக்ஷ்ம சரீரம்). சூக்ஷ்ம உடலும் இயங்கக் காரணமானது எதுவோ அது அதற்கும் வேறானது (ஆத்மா). தூல உடல், சூக்கும உடல் இரண்டுக்கும் காரணமான காரண உடல், என மூன்று உடல்கள் உள்ளன. இவை மூன்றிற்கும் வேராக உள்ளது ஆத்மா.
இதை உணர்த்த நாள் தோறும் அனுபவிக்கும் மூன்று அவஸ்தை நிலைகளை உதாரணமாக விளக்குகிறார். விழிப்பு நிலை, கனவு நிலை, உறக்க நிலை இதை உடலுக்கு வேறாக ஒருவன் இருக்கிறான் என்பதாலேயே உணரமுடிகிறது

Thursday Sep 04, 2025
Thursday Sep 04, 2025
சூழல் காற்றில் சுற்றும் குப்பை போல திரியும் ஜீவன் குருவை சரணடைகிறான் . ஆத்ம ஞாநம் கற்று கொள்ள வேண்டிய தகுதிகளுடன் -தவம் , பக்தி, கேட்க ஆசை, ஸ்ரத்தாவுடன் அவன் கேட்கிறான்.
ஆத்ம வித்தை கேட்க ஆரம்பித்தாலே சம்சாரக் கடல் வற்ற தொடங்கிவிடும்.புழு எப்படி குளவியாய் மாறுகிறதோ அது போல் ஜீவா பரமாத்மாவாகிறான்.
