Friday Apr 03, 2026

நான் யார் ?-1

அகத்தாமரை மலர்மீதுறை யருணாசல ரமணன்

நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை

மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன்

செகத்தாருய வகுத்தான்முறை திருவாசக நிகரே.

 

அறிவே அருளே அழகே அகமே அதுவே ரமண சரணம் சரணம் 

எதுநான் அறிய எனவே தெரியும் அதுவே ரமண சரணம் சரணம் 

மனமும் நினைவும் செயலும் பொருளும் அதுவே ரமண சரணம் சரணம் 

தெளிவே தரவே விழியே அருளே அதுவே ரமண சரணம் சரணம் 

விழியே வழியே விளியே கருணை அதுவே ரமண சரணம் சரணம் 

உடலே உயிரே மனமே இலதே அதுவே ரமண சரணம் சரணம் 

மதியே மனதின் குணமே செயலே அதுவே ரமண சரணம் சரணம் 

முதலே முடிவே இடையே உனதே அதுவே ரமண சரணம் சரணம்

Comment (0)

No comments yet. Be the first to say something!

Copyright 2025 All rights reserved.

Podcast Powered By Podbean

Version: 20241125