
Thursday Mar 05, 2026
கைவல்ய நவநீதம்-27
எத்தனை நாள் வேதாந்தம் கேட்க வேண்டும்?
அந்தக்கரணமும் அந்தக்கரண விருத்தியும் இருக்கும் வரை ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம் தொடரவேண்டும் .
ஸ்ரவணம்- சாஸ்திர தாத்பர்யம் - கவனமாய் கேட்டல்
மனனம்- தாத்பர்யத்தை யுக்தி பூர்வமாக சிந்தித்தல் -
நிதித்யாஸனம் - சிந்தித்த விழையாததற்கு தியானம் செய்வது
ஜீவன் புத்தி நிவர்த்தியே - நிர்வாணம் தனித்தன்மை உண்மை என்பது அடியோடு நீங்குவதே - மோட்சம்
ஜீவன் முக்தர்கள் நான்கு வகைப்படுவர்.
- பிரம்ம வித்
- வரன் -பிரம்மவித்துக்களில் சிறந்தவன்
- வரியான் பிரம்மவித்துக்களில் சிறந்தவர்களுள் சிறந்தவன்
- வரிஷ்டன்பிரம்மவித்துக்களில் சிறந்தவர்களுள் சிறந்தவர்களுள் சிறந்தவன்
இந்த தாரதம்யம் வியவகாரத்தில் தான். ஞானத்தில் தாரதம்யம் இல்லை .
No comments yet. Be the first to say something!